இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - 7 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

TASMAC Erode
By Sumathi Mar 02, 2023 03:17 AM GMT
Report

ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 7 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. தொகுதி முழுவதும் 238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - 7 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை | Erode Polling Holiday For 7 Tasmac Shops

இதற்கான வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற இருக்கிறது. இங்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடை மூடல்

இந்த நிலையில், இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி அந்தக் கல்லூரியின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.டி.டி. கல்லூரியை சுற்றுவட்டாரத்தில் உள்ள எலவுமலை, சுண்ணாம்பு ஓடை, சித்தோடு ஆகிய இடங்களில் உள்ள 7 டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.