கருமுட்டை விற்பனை - 4 பேர் மீதும் பாய்ந்த குண்டர் சட்டம்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கருமுட்டை விற்பனை செய்த வழக்கில் 4 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருமுட்டை விற்பனை
ஈரோட்டில் கடந்த ஜூன் 6ம் தேதி நடந்த வகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவரது கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சுகாதரத்துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில், 5 பேர் கொண்ட குழு, ஈரோடு, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் தனியார் மருத்துவமனைகளில் சோதனை நடத்தினர்.
குண்டர் சட்டத்தில் கைது
மேலும், அங்கு இயங்கி வந்த ஸ்கேன் செண்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அதேபோல் வழக்கில் சம்பந்தப்பட்ட சுதா தனியார் மருத்துவமனைக்கும் சீல் வைக்கப்பட்டு அங்குள்ள நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றினர்.
இந்நிலையில், கருமுட்டை விற்பனை வழக்ல்கில் கைதான 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. சிறுமியின் தாய் சுமையா, இடைத்தரகர் மாலதி உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.