வாக்குப்பதிவு நேரம் முடிந்தும் குறையாத வாக்காளர்கள் கூட்டம்...!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
வாக்குப்பதிவு இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று காலை 9 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமைக்காக வாக்களித்து வந்தனர். சுமார் 2.27 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குப்பதிவினை செலுத்தியுள்ளனர்.
கடந்த 10 மணி நேரத்தில் மட்டும் 1,60,603 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து கொடுத்துள்ளதாக வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாலை 5 மணி நிலவரப்படி 70.58 % வாக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் 77,183 ஆண்களும் மற்றும் 83,401 பெண்களும் வாக்களித்துள்ளனர். இதனையடுத்து வாக்குப்பதிவு நிறைவு செய்யப்பட்டது.
டோக்கன் வாக்களிப்பு
இந்நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 6 மணிக்குள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.