ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு - தபால் வாக்கு முடிவுகள் வெளியீடு...!

Tamil nadu Election Erode
By Nandhini Mar 02, 2023 07:33 AM GMT
Report

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளில், தபால் வாக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வாக்குகளை எண்னும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

தற்போதுவரை 5 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.

இதற்கிடையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறார். அதன் எதிரொலியாக இந்த வெற்றி என்றார்.

erode-lection-counting-tamilnadu

இந்நிலையில், தபால் வாக்குகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தபால் வாக்குகளின் முடிவுகள்

மொத்த தபால் வாக்குகள் - 398

காங்கிரஸ்: 250

அதிமுக: 104

நாம் தமிழர்: 10

தேமுதிக: 1

சமாஜ்வாதி: 2

சுயேச்சை: 5

நோட்டோ: 1

செல்லாதவை: 25