குடும்ப தகராறில் 7 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை! அதிர்ச்சி சம்பவம்
கோபிச்செட்டிபாளையம் அருகே குடும்ப தகராறில் 7 மாத கர்ப்பிணி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பொலவக்காளிபாளையம் கிராமத்தை சேர்ந்த கமல்பிரசாத்துக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வநாயகிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
செல்வநாயகி தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்த நிலையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த செல்வநாயகி கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து செல்வநாயகியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோபிசெட்டிப்பாளைம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.