ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை எப்போது?
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அந்த தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
நட்சத்திர பரப்புரையாளர்களின் பட்டியல் சமர்பிப்பு
இதற்கான முன்னேற்பாடு பணிகளில் பிரதான கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒவ்வொரு கட்சியிலிருந்தும் பரபரப்புரையில் ஈடுபட்டுள்ள நட்சத்திர பரப்புரையாளர்களின் பட்டியலை அரசியல் கட்சிகள் சார்பாக அளிக்கப்பட்டுள்ள நிலையில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை
திமுகவிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்பி, அமைச்சர் உதயநிதி, சிற்றரசு, வெங்கடாச்சலம் உள்ளிட்ட 40 பேர் கொண்ட பட்டியலை தேர்தல் அலுவலரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிப்ரவரி 24 ஆம் தேதி பரப்புரை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.