ஈரோடு இடைத்தேர்தல் : வேட்பாளரை ஆதரித்து பேசிய எடப்பாடி : தூங்கி விழுந்த வேட்பாளர் ? வைரலாகும் வீடியோ

ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Feb 18, 2023 08:05 AM GMT
Report

ஈரோடு இடைத்தேர்தல் தற்போது கடும் பரபரப்பில் உள்ளது , குறிப்பாக அதிமுகவில் ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணி என  பிரிந்திருந்த நிலையில் தற்போது இரட்டை இலைக்கே ஆதரவு தருவதாக ஓபிஎஸ் கூறியதால் அதிமுகவின் எடப்பாடி அணி தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது .

அதிமுக பிரச்சாரம்

அதிமுகவின் எடப்பாடி தரப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு களத்தில் உள்ளார். அவரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். அதிமுக தனது பெயரை மீண்டும் நீருபிக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவிற்கு உள்ளது, காரணம் கடந்த சில நாட்களாக ஆளும் திமுக அரசினை கடுமையாக கேள்வி கேட்கும் கட்சியாக பாஜக என்ற தேசிய கட்சி உள்ளது.

வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் ஈரோடு இடைத்டேர்தலில் தனது கடும் பரப்புரை மூலமாக எடப்பாடியார் திமுக அரசினை கடுமையாக விமர்சனம் வைத்து வரும் நிலையில் ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் தென்னர்சினை எடபாடி பழனிசாமி ஆதரித்து பேசுகையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தூங்கி விழுவது போன்ற காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

தற்போது மீண்டும் தனது பெயரை நிலை நாட்ட கடுமையாக போராடி வரும் அதிமுகவிற்கு இந்த வீடியோ கடும் சருக்கலை கொடுக்கும் எனக் கூறினாலும் அந்த வீடியோ கமெண்டில் சிலர் அவர் தூங்கவில்லை காலகள் வழிக்கியிருக்கலாம் என ஆதரவு தெரிவித்தாலும் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.