பாஜக போட்டியிடாது; ஓபிஎஸ் தரப்பு வாபஸ் பெறவேண்டும் - அண்ணாமலை

Tamil nadu BJP K. Annamalai
By Sumathi Feb 04, 2023 06:59 AM GMT
Report

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடப்போவதில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக போட்டியில்லை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக போட்டியிடாது; ஓபிஎஸ் தரப்பு வாபஸ் பெறவேண்டும் - அண்ணாமலை | Erode Election About Bjp Annamalai

பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்பட்டு நாளை இரவுக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வெற்றி வாய்ப்பை அதிகரிக்க இரட்டை இலையில் போட்டியிடுவது அதிமுகவிற்கு அவசியம்.

அண்ணாமலை 

பிரிந்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறையும் என்பது எங்கள் எண்ணம். மற்றவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி வளரும் கட்சி பாஜக இல்லை. இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாது என அதிமுக இரு தரப்பினரிடமும் கூறிவிட்டோம். ஈபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு ஆதரவு தர ஓபிஎஸ்-இடம் கேட்டுக்கொண்டேன். எங்கள் ஆதரவு வேண்டுமென்றால் இந்த நிலைப்பாட்டை ஏற்கவேண்டும்.

கூட்டணி கட்சியின் விவகாரங்களில் தலையிடுவது பாஜகவின் நிலைப்பாடு இல்லை. இன்று மாலைக்குள் நல்ல முடிவு வரும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனு வாபஸ் பெறுவது குறித்து நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனையை நடத்தியதாக கூறப்படுகிறது.