ஈரோடு கிழக்கு தேர்தல்... - எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை... - சிவக்குமார் பேட்டி..!
எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்று ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
வாக்குப்பதிவு இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று காலை 9 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமைக்காக வாக்களித்து வந்தனர்.
சுமார் 2.27 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குப்பதிவினை செலுத்தியுள்ளனர். மாலை 5 மணி நிலவரப்படி 70.58 % வாக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் 77,183 ஆண்களும் மற்றும் 83,401 பெண்களும் வாக்களித்துள்ளனர். இதனையடுத்து வாக்குப்பதிவு நிறைவு செய்யப்பட்டது.
சிவக்குமார் பேட்டி
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
தற்போதைய நிலவரப்படி 74.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் மட்டும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதுவரை எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்.
மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இதற்கு மேல் வாக்காளர்கள் வர அனுமதி கிடையாது. மாலை 6 மணிக்குள் வாக்குசாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்கின்றனர்.
6 மணி முன் வரிசையில் வந்து நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
33 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 238 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் யாரும் காத்திருக்காத வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார்.