ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - பாத்திரம் கழுவி வாக்கு சேகரித்த கனிமொழி...!

Tamil nadu Viral Video Election Erode
By Nandhini Feb 20, 2023 01:27 PM GMT
Report

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில், கோவை தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் கனிமொழி பாத்திரம் கழுவி வாக்கு சேகரித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் வரும் 25ம் தேதி மாலையோடு நிறைவடைய உள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஈரோடு இடைத்தேர்தல் தற்போது கடும் பரபரப்பில் உள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலையொட்டி, மாதிரி ஓட்டுப்பதிவு வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று நடந்தது.

erode-eastbye-lection-tamilnadu

பாத்திரம் கழுவி வாக்கு சேகரித்த கனிமொழி

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், கோவை தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் கனிமொழி பாத்திரம் கழுவி வாக்கு சேகரித்தார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.