சூடு பிடிக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - வியூகம் அமைக்கும் பாஜக, அதிமுக

Tamil nadu AIADMK BJP K. Annamalai Edappadi K. Palaniswami
By Thahir Jan 19, 2023 01:39 AM GMT
Report

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஓபிஎஸ் தலைமையில் வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

பிப்ரவரி 27-ல் இடைத்தேர்தல் 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த தொகுதிக்கான இடைதேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

erode-east-constituency-by-elections-

இதையடுத்து அந்தத் தொகுதியில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்த சூழலில் வரும் 23-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

குழு அமைத்த பாஜக 

இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் பணிக் குழுவை அமைத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் 14 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை.