ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் கடந்த 4ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு திருமகன் ஈவெரா காலமானார். இதனிடையே இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியை திமுக தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது.
பின்னர் காங்கிரஸ் கட்சி யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பது பற்றி தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தது.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டி
இதையடுத்து நேற்று இரவு ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பட்டியலை இந்திய காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அதன்படி இந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இளைய மகனுக்கு வாய்ப்பு கேட்ட நிலையில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட கட்சி மேலிடம் வாய்ப்பு அளித்துள்ளது. இந்த தகவலை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
அறிவிப்பை தொடர்ந்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காங்கிரஸ் கட்சியின் தலைமை என் மீது நம்பிக்கை வைத்து வேட்பாளராக அறிவித்து உள்ளது.
தலைமையில் முடிவை ஏற்கிறேன். தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்று பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆம் தேதி ஐபிசி தமிழ்நாடு ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடா வாய்ப்பு உள்ளதாக செய்தி வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.