ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை!
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
இடைத்தேர்தல்
தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆகவே, ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈபிஎஸ் ஆலோசனை
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக வின் மூத்த நிர்வாகிகளுடன் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், அதிமுக வழக்கு மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.