ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவு விறுவிறுப்பு..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. பொது தேர்தலுக்கு சற்றும் குறையாமல் தமிழகத்தையே எதிர்பார்க்க வைத்த இடைத்தேர்தல் தற்போது தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் 2,27,543 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
விறுவிறுப்பாக நடைபெறும் தேர்தல்
738 வாக்குச்சாவடிகளில் தற்போது தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதில், வாக்காளர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை தற்போது செலுத்த தொடங்கியுள்ளனர்.
காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உட்பட மொத்தமாக 77 வாக்காளர்கள் இந்த இடைத்தேர்தலில் களம் காணுகின்றனர். அதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடியில் 5 வாக்குபதிவு இயந்திரங்கள் உள்ளன.
மொத்தம் 738 வாக்குச்சாவடியில் 33 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என குறிப்பிடப்பட்டு அந்த வாக்கு சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பது அளிக்கப்பட்டுள்ளது.