ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகா போட்டியா? - ஜி.கே.வாசனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
காங்கிரஸ் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவெரா திருமகன் உயிரிழந்ததை அடுத்து காலியகாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமாகா போட்டியா?
இதையடுத்து ஈரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் இன்று காலை 11 தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சந்திக்க உள்ளனர்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் யுவராஜ் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.