ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - பாஜக தீவிர ஆலோசனை

ADMK AIADMK BJP K. Annamalai
By Thahir Jan 20, 2023 05:24 AM GMT
Report

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து கடலூரில் மாநில செயற்குழு கூட்டமானது பாஜக மேவிட பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமையில் இன்று நடைபெற உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடக்க உள்ளது. இதனால் பிரதான கட்சிகள் முழுவீச்சில் தங்கள் தேர்தல் பணிகளை ஆரம்பித்து உள்ளன.

கடந்த முறை 2021 தேர்தலில் திமுக – அதிமுக என இரு கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளை களம் இறக்கியது.

அதேபோல இந்த முறை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு மீட்டும் ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் அதிமுக கூட்டணியிலுள்ள பாஜக தனது நிலைப்பாடு குறித்து இன்று கடலூரில் ஆலோசனை நடத்துகிறது.

பாஜக முக்கிய ஆலோசனை 

கடலூரில் மாநில செயற்குழு கூட்டமானது பாஜக மேவிட பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமையில் இன்று நடைபெற உள்ளது.

erode-east-constituency-by-election

இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்ள உள்ளனர். இதில் இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன? பாஜக தனித்து களம் காண உள்ளதா? அல்லது அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதா? என்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரஸ் நாங்கள் போட்டியிடவில்லை அதிமுக தான் போட்டியிடுகிறது என்று அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.