ஈரோடு இடைத்தேர்தல் ரத்தா? : தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய ஆலோசனை
வரும் 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் பணிகளில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
ஈரோடு தேர்தல்
இந்த நிலையில், ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, இன்று மாலை இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள், முன்னேற்பாடுகள் குறித்து காணொளி மூலம், இன்று மாலை 5 மணிக்கு துணை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு காணொளி காட்சி மூலம் கலந்து கொள்கிறார்.
ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் பணவிநியோகம், பரிசுப்பொருள் விநியோகம் தொடர்பாக எழுந்த புகார்கள் மேலும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
ஒரு வேளை புகார்கள் நிரூபிக்கப்பட்டதாக இருந்தால் தேர்தல் நாள் தள்ளி போகும் , ஆகவே ஒரு வேளை ஈரோடு இடைத்தேர்தல் ரத்தாகலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.