ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இபிஎஸ் தரப்பிற்கு பாஜக ஆதரவு

ADMK BJP Edappadi K. Palaniswami
By Irumporai Feb 07, 2023 07:00 AM GMT
Report

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசுவுக்கு பாஜக ஆதரவு தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் இரு அணிகளாக இருந்த ஓபிஎஸ் ஈபிஎஸ் அணியின் பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு வந்த நிலையில் அதிமுகவின் சார்பாக ஈரோடு இடைத்தேர்தலில் தென்னரசை நிறுத்த ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பு ஒரு மனதாக நிறைவேற்றியது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இபிஎஸ் தரப்பிற்கு பாஜக ஆதரவு | Erode East By Elections Bjp Eps

 பாஜக ஆதரவு

இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் களம் இறங்க போவதில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதிமுகவின் வேட்பாளர் தென்னரசுக்கு தமிழக பாஜக ஆதரவு தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கள் தேர்தல் நிலைப்பட்டு ஆதரவு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுவுக்கு தங்கள் முழு ஆதரவை தெரிவித்து கொள்வதாக அறிவித்துள்ளார்.

மேலும், சட்டபூர்வமாக அதிமுக வேட்பாளரை முன்னிறுத்திய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொது நலன் கருதி தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்ற அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கும் தங்கள் நன்றி எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திமுகவை எதிர்த்து அனைவரும் ஒன்றாக இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தங்கள் தொடர்களையும் கேட்டுக்கொண்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.