ஈரோடு கிழக்கு இடைதேர்தல் வாக்குப்பதிவு நிறைவு - கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றச்சாட்டு
ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியினர். காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்த நிலையில் மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
வாக்குப்பதிவு நிறைவு
மாலை 5 மணி நேர நிலவரப்படி 64.02 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளன.
இதனிடையே பரிதா பேகம் என்ற பெண் வாக்காளர் வாக்களிக்கச் சென்ற போது, அவரது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டிருப்பதாக கூறி வாக்குச்சாவடி அலுவலர்கள் அவரை திருப்பி அனுப்பியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், பூத் ஸ்லிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை என்னிடம் இருக்கும் போது எப்படி இன்னொருவர் என் வாக்கை செலுத்த முடியும் என தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.
கள்ள ஒட்டு
இதனையடுத்து, வீரப்பன் சத்திரம் பகுதியில் உள்ள 46வது எண் கொண்ட வாக்குச்சாவடியில், நாம் தமிழர் கட்சியினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக மீது திமுகவினர் குற்றம்சாட்டினர். இதனால் இரு கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பதட்டம் நிலவியதையடுத்து அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
திமுகவினர் எங்கள் வாக்குச்சாவடி முகவர்களை மிரட்டி வெளியில் அனுப்புவதாகவும், அவர்களின் பெற்றோர்களை முகவர்களை மிரட்டுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதா லட்சுமி கூறியுள்ளார்.