ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு?
ஒற்றை தலைமை விவகாரமும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற சிக்கலும் உள்ள நிலையில் இடைத்தேர்தலை அதிமுக சந்திக்கிறது.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடக்க உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.
இந்த தொகுதியில் யுவாராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு இருந்தார்.தற்போது மீன்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற அக்கட்சியின் விருப்பத்தை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜி.கே .வாசன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் களம் இறக்குவது குறித்து வருகின்ற ஜனவரி 23ம் தேதி நடைபெறவிருக்கின்ற ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னிர்செல்வம் அணியும் முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓ.பி.எஸ் அணியின் மாவட்ட செயலராக இருக்க கூடிய முருகானந்தம் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது .இது தொடர்பாக சென்னையில் நடைபெறவிருக்கின்ற ஆலோசனை கூட்டத்தில் ஓ.பி.எஸ் முடிவெடுக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஒரு வேலை ஓ.பி.எஸ் அணியிலும் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அதிமுகவின் இரட்டை இல்லை யாருக்கு என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.