தேசிய அரசியலில்தான் இருக்கிறேன் - முதலமைச்சர் பெருமிதம்
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையை தொடர்ந்து முதலமைச்சர் பேட்டியளித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னிலை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வாக்குகளை எண்னும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போதுவரை 8 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது.
இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 30 ஆயிரத்திற்கும் மேல் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து டி.ஆர். பாலு, அன்பழகன், கே.என்.நேரு உட்பட அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
முதலமைச்சர் மகிழ்ச்சி
அதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்த வாக்காள பெருமக்களுக்கு என் இதய பூர்வமான நன்றி. திராவிட மாடல் ஆட்சிக்கு சிறப்போடு நடத்த வேண்டும் என்று மக்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.
20 மாதகால திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம். நான் ஏற்கனவே தேசிய அரசியலில்தான் உள்ளேன். யார் பிரதமராக வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதே திமுகவின் கொள்கை முடிவு. நாடாளுமன்ற தேர்தலில் இதைவிட பெரிய வெற்றியை மக்கள் வழங்குவார்கள்.
ஈபிஎஸ் நாலாம்தர பேச்சாளர் போல் பேசியதற்கு மக்கள் நல்ல பாடம் தந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.