வாக்கு எண்ணிகை முடிவை அறிவிப்பதில் தாமதம் - செய்தியாளர்கள் போராட்டம்
ஈரோடு வாக்கு எண்ணிக்கையை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு பதிவு கடந்த 27-ஆம் தேதி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 33 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 238 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், 2ஆம் சுற்றில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 6 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
செய்தியாளர்கள் போராட்டம்
அதனைத் தொடர்ந்து 3ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது. தற்போது வாக்கு வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிப்பதில் தாமதமானதால் செய்தியாளர்கள் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திக் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.
அதன்பின் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி செய்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.