ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவு நிறைவு

Tamil nadu Erode
By Sumathi Feb 27, 2023 12:39 PM GMT
Report

238 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடந்து நிறைவு பெற்றது.

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது.

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவு நிறைவு | Erode By Election Voting

இந்த நிலையில் இன்று பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 2.27 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குப்பதிவினை செலுத்தி ஜனநாயக கடமைகளை ஆற்றினர்.

வாக்குப்பதிவு

கடந்த 10 மணி நேரத்தில் மட்டும் 1,60,603 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து கொடுத்துள்ளதாக வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 70.58 % வாக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் 77,183 ஆண்களும் மற்றும் 83,401 பெண்களும் வாக்களித்துள்ளனர். தற்போது, வாக்குப்பதிவு நேரம் நிறைவு பெற்றுள்ளது.