ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தபால் வாக்குகளில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு பதிவு கடந்த 27-ஆம் தேதி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 33 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 238 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து, வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 74.74 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
தபால் வாக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. அதன்படி, திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.
பதிவான வாக்குகள் 15 சுற்றுகளாக எண்ணப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பதிவான 397 தபால் வாக்குகளில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.