பணநாயகம் வென்றது - கோபமாக வெளியேறிய அதிமுக வேட்பாளர் தென்னரசு
பணநாயகம் வென்றதாக அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறினார்.
அதிமுக-தென்னரசு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு பதிவு கடந்த 27-ஆம் தேதி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 33 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 238 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் படி திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 37,654 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு 15,214 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு பணநாயகம் வென்றதாக வாக்கும் எண்ணும் மையத்தில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.