ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி ஏற்கிறோம் - அண்ணாமலை பேட்டி

BJP K. Annamalai Erode
By Thahir Mar 02, 2023 09:42 AM GMT
Report

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவாக வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 9 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது.

தற்போது 10-வது சுற்று எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் 70 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

தலை வணங்கி ஏற்கிறோம் 

சுமார் 45,000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.

அதிமுக வேட்பாளர் 24985 வாக்குகளை பெற்று பின்னடைவில் உள்ளார். தேர்தல் முடிவு குறித்து அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

erode-by-election-speech-annamalai-speech

இது குறித்து அவர் பேசுகையில், ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி ஏற்கிறோம். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் பெரும்பாலும் வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்ததே.

திமுக அரசின் செயல்பாட்டை ஆராய்ந்து மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதை நாங்கள் ஏற்க மாட்டோம். 2024 மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கான தேர்தல். ஆளும் கட்சி எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இடைத்தேர்தல் உணர்த்தியுள்ளது.

திருமளவன் குறித்து விமர்சனம் 

ஒரே சின்னத்தில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் நிற்க வேண்டும் என்பதை பாஜக முன்பே கூறியது என தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான சாக்குப் போக்குகளை திருமாவளவன் தேடி வருகிறார்.

வெளியேறுவது என்றால் வெளியேறிவிட வேண்டும். சாக்கு போக்குகளை கூறக்கூடாது என தெரிவித்துள்ளார்.