ஈரோடு இடைத்தேர்தல் : செந்தில் முருகன் வேட்பாளர் – ஓபிஎஸ் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் சார்பாக செந்தில்முருகன் போட்டி என ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
ஓபிஎஸ் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமது தரப்பில் போட்டியிடும் வேட்பாளரை இன்று மாலை 5 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை பசுமை வழிசாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் சார்பாக செந்தில்முருகன் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.
வெற்றி வாய்ப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் சார்பாக கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி இன்று காலை அறிவித்திருந்த்தநிலையில், தற்போது தங்கள் சார்பாக செந்தில்முருகன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும் ஓபிஎஸ் கூறுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் செந்தில் முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
பாஜகவின் முடிவுக்கு காத்திருக்கிறோம்
தேசிய கட்சியான பாஜகவை முடிவெடுக்கும்படி நிர்பந்திக்க முடியாது. மரியாதை நிமித்தமாக பாஜகவின் முடிவுக்கு காத்திருக்கிறோம். அதிமுகவில் ஒற்றுமை இல்லாமல் போனதற்கு நான் காரணம் அல்ல என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் தேர்தல் பணிக்குழுவுக்கு கூடுதல் நிர்வாகிகள் நியமிக்கப்படுவர் என தெரிவித்தார்.
இதனிடையே, அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் வருகிறது. உச்சநீதிமன்ற விசாரணையின்போது எங்கள் தரப்பு வாதத்தை முன்வைப்போம் எனவும் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.