வேட்பாளர்களை நிராகரித்த வாக்காளர்கள் - நோட்டாவிற்கு எத்தனை ஓட்டுக்கள் தெரியுமா?
ஈரோடு இடைத்தேர்தலில் நோட்டாவிற்கு பதிவான வாக்குகள் குறித்து பார்க்கலாம்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி
ஈரோடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது.அதில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

முக்கிய கட்சி வேட்பளார்கள் பெற்ற வாக்கு விவரங்கள்
1. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்.) -1,10,156.
2. கே.எஸ்.தென்னரசு (அ.தி.மு.க.) -43,923.
3. மேனகா நவநீதன் (நாம் தமிழர் கட்சி) -10,827.
4. எஸ்.ஆனந்த் (தே.மு.தி.க.) -1,432.
77 வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நிலையில், மக்கள் பல வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். இந்த நிலையில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்கள் தங்கள் வாக்கினை நோட்டாவிற்கும் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இந்த இடைத்தேர்தலில் நோட்டாவிற்கு 798 வாக்குகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.