ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - ஆர்வமாக தபால் வாக்கு செலுத்தும் போலீசார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதையடுத்து அந்த தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே திமுக, அதிமுக,நாம் தமிழர், பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளை சார்ந்த தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சூடு பிடித்துள்ளது.
காவல்துறையினர் தபால் வாக்குப்பதிவு
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதே போல அதிமுக சார்பில் தென்னரசு போடடியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற இளம் பெண் போட்டியிடுகிறார். இவர்களை தவிர தேமுதிக வேட்பாளர் ஆனந்த் களத்தில் உள்ளார்.
இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தபால் ஓட்டு போடும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் 58 காவலர்கள் தங்கள் தபால் வாக்குகளை செலுத்தினர்.