இடைத்தேர்தல் - ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்
Tamil nadu
AIADMK
O. Panneerselvam
By Sumathi
வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.
ஓபிஎஸ் தரப்பு வாபஸ்
பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது இல்லத்தில் ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனு வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. மேலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்போம். இரட்டை இலை சின்னம் முடக்கப்படக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு.
இரட்டை இலை சின்னம் வெற்றிப்பெற பரப்புரை செய்வோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.