ஈரோடு இடைத்தேர்தல் : ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் ?
ஈரோடு இடைத்தேர்தலில் நடைபெற்ற ஆலோசனையை கூட்டத்தில் பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாபஸ்
பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போட்டியில் இருந்து பன்னீர்செல்வம் தரப்பு வாபஸ் பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆலோசனையில் தகவல்
வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனு வாபஸ் பெறுவது குறித்து நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனையை நடத்தியதாக கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளரை வாபஸ் பெறுவது பற்றி கிருஷ்ணன், வைத்திலிங்கம், பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்று ஆலோசித்ததாக கூறப்படுகிறது.