ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்றுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு

Erode
By Thahir Feb 07, 2023 02:54 AM GMT
Report

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வது, இன்றுடன் நிறைவு பெறுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா, மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து காலியாக உள்ள அத்தொகுதியில் பிப்-27இல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில், போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்கள் கடந்த ஜன-31 முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

erode-by-election-nominations-completed-today

இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும், மேலும் வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை நாளை நடைபெறும் எனவும் மனுக்களை வாபஸ் பெறுவதற்கு பிப்-10 ஆம் தேதி கடைசி நாள், அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு 

இதனையடுத்து அனைத்து கட்சியினர் சார்பிலும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

நேற்றுவரை மொத்தம் 59 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் சில சுயேச்சை வேட்பாளர்களும் தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக வின் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என இரு தரப்பினரில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என நிலவிவந்த உச்சநீதிமன்ற வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்பாளர், தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.