இடைத்தேர்தல் வெற்றி முதலமைச்சரையே சாரும் - ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி முதலமைச்சரையே சாரும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வந்தடைந்தார்.

தற்போது, வாக்கு எண்னிக்கையில் 49,890 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளார் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு 19,172 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார்.
இளங்கோவன்
இந்நிலையில் தொடர்ந்து முன்னிலையில் நீடிக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், ராகுல் காந்தி மீது தமிழக மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதையே இந்த வெற்றி காட்டுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு எடுத்துக்காட்டு. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையே சாரும். மதச்சார்பற்ற கூட்டணி மீது தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தேர்தல் முடிவு காட்டுகிறது.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முதல்வர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டதற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.