ஈரோடு இடைத்தேர்தல்; திமுக - நாம் தமிழர் கட்சியினர் மோதல் - பிரச்சாரத்தை முடித்து வெளியேறிய சீமான்

Naam tamilar kachchi Seeman Tamil Nadu Police Erode
By Thahir Feb 22, 2023 04:37 PM GMT
Report

வீரப்பன்சத்திரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற தேர்தல் பரப்புரையில் கல்வீசப்பட்டதால் பரபரப்பு.

ஈரோடு இடைத்தேர்தல் 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதையடுத்து அந்த தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே திமுக, அதிமுக,நாம் தமிழர், பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளை சார்ந்த தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சூடு பிடித்துள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதே போல அதிமுக சார்பில் தென்னரசு போடடியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற இளம் பெண் போட்டியிடுகிறார். இவர்களை தவிர தேமுதிக வேட்பாளர் ஆனந்த் களத்தில் உள்ளார்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக மற்றும் அதிமுக பணப்பட்டுவாடா செய்வதாக இதர கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

திமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதல் 

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

erode-by-election-dmk-naam-tamil-party-clash

அப்போது திமுகவினர் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 6 பேர் காயம் அடைந்தனர். மேலும் கார்கள் உடைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசாரும், துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.