ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; தேமுதிக தனித்துப் போட்டி - விஜயகாந்த் அறிவிப்பு

Vijayakanth DMDK Erode
By Thahir Jan 23, 2023 09:12 AM GMT
Report

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் கடந்த 4ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு திருமகன் ஈவெரா காலமானார். இதனிடையே இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அத்தொகுதியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தனித்துப் போட்டி 

எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேமுதிக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? அல்லது வேறு கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதா என சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

erode-by-election-dmdk-individual-competition

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆனந்த் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.