டெபாசிட் இழந்த நாம் தமிழர், தேமுதிக வேட்பாளர்கள் - 75 பேர் அவுட்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட 75 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
தேர்தல் முடிவுகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
16 மேசைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 14 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் தொடர் முன்னிலையில் இருந்தார்.
இதன்பின், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் இறுதி கட்ட வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வரலாற்றில் இடம் பிடித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 1,03,769 வாக்குகளை பெற்று வெற்றியின் விளிம்பில் இருந்தார்.
அதிமுக வேட்பாளர் தென்னரசு 41,268 வாக்குகளை பெற்று இருந்தார். தென்னரசுவை விட 63 ஆயிரம் வாக்குகளில் இளங்கோவன் முன்னிலை வகித்து வந்தார்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு 43,553 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
பின்னுக்கு தள்ளப்பட்ட நாம் தமிழர், தேமுதிக
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 9 வாக்குகளை பெற்று டெபாசிட்டை இழந்தார், அதே போன்று தேமுதிக வேட்பாளர் ஆனந்த் டெபாசிட் இழந்தார்.
இந்த தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 75 பேர் டெபாசிட் பெறாமல் தோல்வியை தழுவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.