ஈரோடு இடைத்தேர்தல் ; ஓய்ந்தது தேர்தல் பரப்புரை - வெளிமாவட்டத்தினர் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரை இன்று மாலை 5 மணியோடு ஓய்ந்தது.வெளிமாவட்டத்தினர் உடனடியாக வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு.
தேர்தல் பரப்புரை முடிந்தது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாட்கள் முதல் ஆளும் திமுக, மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியோடு ஓய்ந்தது.

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள வெளி மாவட்டத்தினர் உடனடியாக வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரோடு இடைத்தேர்தலுக்கு 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு, ஆயிரத்து 430 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளது என தெரிவித்துள்ள சத்ய பிரதா சாகு, வாக்குச் சாவடியில் ஆயிரத்து 206 தேர்தல் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார்.