ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு; 3 மணி நிலவரப்படி 59.28% வாக்குகள் பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 59.28% வாக்குகள் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது.
இந்த நிலையில் இன்று பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 2.27 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குப்பதிவினை செலுத்தி ஜனநாயக கடமைகளை ஆற்றி வருகின்றனர்.
3 மணி நிலவரம்
இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து கொடுத்துள்ளதாக வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 3 மணி நிலவரப்படி 59.28% வாக்குப்பதிவு செய்துள்ளனர். 65,350 ஆண்கள், 69,400 பெண்கள் வாக்களித்துள்ளனர் மொத்தமாக 1,34,758 வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்தியுள்ளனர்.