ஈரோடு கிழக்கு தேர்தல் களம்: 1 மணி வாக்கு நிலவரம்
1 மணி நிலவரப்படி 44.56% வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது.
இந்த நிலையில் இன்று பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 2.27 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குப்பதிவினை செலுத்தி ஜனநாயக கடமைகளை ஆற்றி வருகின்றனர்.
1 மணி நிலவரம்
கடந்த 4 மணி நேரத்தில் மட்டும் 63,469 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து கொடுத்துள்ளதாக வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 1 மணி நிலவரப்படி 44.56% வாக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 6 மணி நேரத்தில் 1,01, 392 பேர் வாக்களித்துள்ளனர்.