சென்னைக்கு வருகை தந்துள்ள சேகுவேரா மகள் - என்ன காரணம்?
சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா சென்னைக்கு வருகை தந்துள்ளார்.
சேகுவேரா மகள்
தென் அமெரிக்கா நாடுகளில், ஒன்றான கியூபாவின் விடுதலை வீரரும் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி குவேரா சென்னை வந்துள்ளனர். மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில், மார்க்சிய கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் டி. கே ரங்கராஜன், மாநில கட்டுபாட்டு குழு உறுப்பினர் சங்கர் வல்லம் கோபி உள்ளி்ட்டோர் மாலை அணிவித்தனர்.
மேலும், இந்நிகழ்வில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் மதிமுக மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்ட செயலாளர்கள் எல்.சுந்தராஜன், இரா.வேல்முருகன், ஜி.செல்வா, மாநிலக்குழு உறுப்பினர்கள் பா.ஜான்சிராணி, எம்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வரவேற்பு அளித்தனர்.
சென்னை வருகை
அதனைத் தொடர்ந்து, சென்னையில் 3 நாட்கள் தங்கி இருக்கும் அலெய்டா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாளை சென்னையில் நடக்கும் பாராட்டு விழாவில் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி, காங்கிரஸ், மதிமுக உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.