மக்களே உஷார்.. சீரும் வேகத்தில் மாறுபட்ட கொரோனா, 9வது அலை உறுதி - அச்சத்தில் உலக நாடுகள்!

COVID-19 World Health Organization
By Vinothini Aug 05, 2023 06:31 AM GMT
Report

 மாறுபட்ட கொரோனா வேகமாக பரவும், 9 வது அலை வர கூடும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோன

கடந்த 2021-ம் ஆண்டு முதல் கொரோன பரவல் அதிகரித்து வந்தது. இதனால் பல நாடுகள் பாதிக்கப்பட்டது, இதனால் பலர் உயிரிழந்தனர். அதன்பிறகு கொரோனா உருமாற்றம் அடைந்து பரவும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

eris-corona-spreads-rapidly

தற்போது வரை 8 அலைகளாக பரவி வந்த கொரோனா மீண்டும் உருமாற்றம் அடைந்து 9 வது அலையாக வர உள்ளது. கொரோனாவின் 9வது அலை உறுதி செய்யப்பட்டு, அதற்கு Eris Variant என ஆய்வாளர்கள் பெயரிட்டு அடையாளப்படுத்தியுள்ளனர்.

அச்சத்தில் மக்கள்

இந்நிலையில், கடந்த ஜூலை 31-ம் தேதி இங்கிலாந்தில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே ஆசியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா விரைவில் பரவ கூடியவை என்பதால் முந்தைய கொரோனா பாதிப்புகளை விட விகிதத்தில் அதிகம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

eris-corona-spreads-rapidly

இது பெரிதளவிற்கு உயிரிழப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும், மக்கள் கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.