மைதானத்தில் மயங்கிவிழுந்த டென்மார்க் வீரர்- யூரோ கோப்பை போட்டி நிறுத்தம்!

football eriksen eurocup
By Irumporai Jun 12, 2021 07:08 PM GMT
Report

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின்போது நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்ததால் போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது.

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த நாடுகளின் அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன.

இந்த நிலையில் கோபன்ஹேகனில் இன்று நடந்த ஆட்டத்தில் டென்மார்க்-பின்லாந்து அணிகள் விளையாடின.

முதல் பாதி ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்கள் இருந்தபோது டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் நிலைகுலைந்து விழுந்து மூர்ச்சையானார்.

அவர் அசைவற்று கிடந்ததால் உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டது. மருத்துவக் குழுவினர் மைதானத்திற்குள் வந்து சிகிச்சை அளித்தும் அவருக்கு நினைவு திரும்பவில்லை.

இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கிறிஸ்டியன் எரிக்சன் உடல்நலம் சீரடைய வேண்டி சக வீரர்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்தனர்.

தற்போது கிறிஸ்டியன் எரிக்சன் சுய நினைவோடு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,