திருவாரூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி வகுப்பறையில் தமிழ் மொழி அழிப்பு..!

Thiruvarur
By Thahir Jul 27, 2023 08:09 AM GMT
Report

திருவாரூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள வகுப்பறையில் தமிழ் மொழி அழிக்கப்பட்டுள்ளதால் தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் மொழி அழிப்பு 

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரில் அமைந்துள்ள இந்த தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது.

eradication of tamil in kendriya vidyalaya school

கேந்திரிய வித்யாலயா பள்ளி. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

தற்போது இந்த பள்ளியில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன மாணவர்களும் பயின்று வருகிறார்கள்.

இந்த நிலையில். இந்தப் பள்ளியில் உள்ள ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பு உள்ளிட்ட பல்வேறு வகுப்பறை முகப்புகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் அந்தந்த வகுப்பு பெயர்கள் எழுதப்பட்டுள்ளன ஆனால் தமிழ் மொழியில் இருந்த பெயர் அழிக்கப்பட்டுள்ளது.

eradication of tamil in kendriya vidyalaya school

பள்ளி நிர்வாகம் விளக்கம் 

இதுகுறித்து பள்ளி முதல்வரிடம் கேட்ட பொழுது வகுப்பறை மாற்றம் காரணமாக வகுப்பறை பெயர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுதப்பட்டுள்ளன விரைவாக தமிழ் மொழியிலும் வகுப்பறை பெயர்கள் எழுதப்படும் என தெரிவித்தார்.. தமிழ் மொழியை நாங்கள் புறக்கணிக்கவில்லை என தெரிவித்தார்.