கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளை வழங்குமாறு பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்...

Black fungus Pm modi Edappadi palanisamy
By Petchi Avudaiappan May 31, 2021 05:55 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை ட்விட்டரில் பதிவிடுள்ள அவர், “கருப்பு பூஞ்சை எனப்படும் மியூகோர்மைகோசிஸ் தமிழகத்தில் தற்போது அதிகளவில் பரவி வரும் சூழலில் லிபோசோமல் ஆம்போடெரிசின்-பி IV மருந்து ஒதுக்கீட்டை தமிழகத்திற்கு அதிகரித்து பாதிக்கப்பட்டவர்களின் உயிர் காக்கும் சிகிச்சைக்கு உதவிட பிரதமரை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் தனது கோரிக்கைகளை ஏற்று தமிழகத்திற்கான கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்துகளையும், ஆக்சிஜன் விநியோகத்தையும் அதிகப்படுத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.