அதிமுக பொதுக்குழு தீர்ப்பு : எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் செய்த மாற்றம் என்ன தெரியுமா?
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் .
அதிமுக பொதுக்குழு வழக்கு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
பொதுக்குழு செல்லும்
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதில், எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் ஜூலை 11-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது. இந்நிலையில், ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்த பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில் மீண்டும் 'அதிமுக இடைக்கால பொதுசெயலாளர்' என பதிவிட்டுள்ளார்.
மறைந்த ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்தபோது, எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகச் செயலாளராகவும் ஓ.பன்னீர் செல்வம் பொருளாளராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
புத்தர் சிலை விவகாரம் - வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட அநுர அரசு: சுமந்திரன் கடும் சீற்றம் IBC Tamil