உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ஈ.பி.எஸ். அணி நடவடிக்கை

ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Feb 04, 2023 04:08 AM GMT
Report

பொதுக்குழுவில் இறுதி செய்யும் என்றும் வேட்பாளரை தேர்வு செய்யும் விவகாரத்தில் பொதுக்குழுவில் வாக்கு எடுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தலுக்காக ஓ. பன்னீர்செல்வம் தரப்பையும் உள்ளடங்கிய பொதுக்குழுவை கூட்ட நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

  இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்திற்கு மட்டும் இது பொருந்தும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 நீதி மன்றம் உத்தரவு

இதன் மூலம் அதிமுக வேட்பாளரை பொதுக்குழுவில் இறுதி செய்யும் என்றும் வேட்பாளரை தேர்வு செய்யும் விவகாரத்தில் பொதுக்குழுவில் வாக்கு எடுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகளை அவை தலைவர் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும், தற்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்பட்டு நாளை இரவுக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ஈ.பி.எஸ். அணி நடவடிக்கை | Eps Team Action Following The Supreme Court

சென்னை தவிர பிற மாவட்டங்களில் மாவட்ட செயலாளர் பொறுப்பாளர்கள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவம் வழங்கப்படும் என்றும் உறுப்பினர்களின் வேட்பாளர் ஒப்புதல் படிவம் திங்களன்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில்சமர்ப்பிக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.