தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் நான்கு முதலமைச்சர்கள் : உதயநிதியை கிண்டல் செய்த ஈபிஎஸ்
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வுசெய்யப்பட்டார்.
அமைச்சராகும் உதயநிதி :
இந்த நிலையில் வரும் 14 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செய்திக்கு எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் :
உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது. உதயநிநி அமைச்சர் ஆகிவிட்டால் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடபோகிறதா? ஏற்கனவே எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெற்று கொண்டுள்ளது.

எடப்பாடி கிண்டல்
இவர் வந்தால் நடைபெற்று வரும் ஊழலுக்கு எல்லாம் தலைமையாக இருந்து செயல்படுவார். குடும்ப ஆட்சிக்கு , வாரிசு ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.
ஏனென்றால் நாடு மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்காத ஒரு ஆட்சி என்றால் அது திமுக ஆட்சி. மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர் தான் இருப்பார்கள்.
ஆனால் தமிழகத்திற்கு 4 முதலமைச்சர்கள் இருக்கிறார்கள்.ஸ்டாலின், அவரது மனைவி, அவருடைய மருமகன் அவருடைய மகன். ஒரு முதலமைச்சருக்கே தாங்காத போது, நான்கு முதலமைச்சர் என்றால் நாடு தாங்குமா? என விமர்சித்தார்.