கஞ்சாவை ஒழிப்போம்: எடப்பாடி பழனிசாமி

Edappadi K. Palaniswami
By Fathima Apr 21, 2026 09:33 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில் இன்று 6 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது.

இந்நிலையில் சேலம் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு அதிமுக வேட்பாளர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

அப்போது அவர் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளது, பொதுமக்கள், பெண்கள், சிறுமிகள் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் வீதியில் நடமாட முடியவில்லை.

கஞ்சாவை ஒழிப்போம்: எடப்பாடி பழனிசாமி | Eps Speak In Last Campaign

போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது, சட்ட ஒழுங்கு சீர்கேடு அதிகரித்துவிட்டது, இளைஞர்கள் போதைபழக்கத்துக்கு அடிமையாகிவிட்டனர், இதற்கு ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம் என தெரிவித்தார்.