தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
edappadi palanisamy slams tvk govt losing industries to andhraதமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில்களை தவெக அரசு ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்த்துக் கொண்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தின் அக்டோபர் மாத #GST வருவாய் வளர்ச்சி வெறும் 3%-ஆக, தேசிய சராசரியை விட மிகக் குறைவாக இருப்பதாக வரும் செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது.

ஒருபுறம், தமிழகத்தின் விலைவாசி உயர்வு தேசிய சராசரியை விட அதிகமாகி, மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
மறுபுறம், நமக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு சென்றுக் கொண்டிருக்கின்றன. இன்று கூட, 3 தென்கொரிய நிறுவனங்கள் தங்கள் 1614 கோடி ரூபாய் முதலீட்டை தமிழ்நாட்டை நிராகரித்துவிட்டு ஆந்திர மாநிலத்திற்கு சென்றுவிட்டதாக செய்திகள் வருகின்றன.
திருமலை படத்தில், விஜய் “Take Diversion “ என்று நடிகர் விவேக்கை திருப்பதியில் இறக்கி விடுவதைப் போல, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில்களை எல்லாம் “Take Diversion” என்று ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது இன்றைய தவெக அரசு.
தொழில் வளம் பெருகி, பல வேலைவாய்ப்புகள் வந்து, அதனால் GDP முன்னேறி, Per Capita Income உயர்ந்தால் தானே, GST வருவாய் அதிகரிக்கும்? தொழில் வளம் எல்லாம் மற்ற மாநிலங்களிடம் தாரை வார்த்துவிட்டு, மக்களுக்கு “Purchasing Power” இல்லாமல் போனால் எப்படி GST வருவாய் உயரும்?
இதையெல்லாம் சொல்லிப் புரிய வைக்கும் ஆட்சியா இன்றைக்கு இருக்கிறது? இந்த லட்சணத்தை சுட்டிக் காட்டினால் இன்றைய ஆட்சியாளர்களுக்கு கோபம் வேறு வருகிறது.
தமிழ்நாட்டின் எதிர்கால தொழில்வளத்தைக் கட்டமைக்க மாண்புமிகு அம்மா அவர்கள் துவக்கிய GuidanceTN அமைப்பை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி இருக்கிறது இன்றைய ஆச்சரியக்குறி அரசு.
குரங்கின் கையில் கிடைத்த பூமாலை போல இந்த கூட்டத்திடம் தமிழகத்தில் நிர்வாகம் மாட்டிக் கொண்டு படும் பாடு, வரலாற்றுச் சோகம்!
தேர்வுக்கு ஒரு வார்த்தை கூட படிக்காமல், இவ்வளவு ஏன், என்ன Subject என்றே தெரியாமல், தேர்வு நாள் அன்று Question Paper-ஐ பார்த்தால் பதில் வந்துவிடுமா? உங்களுக்கு தான் கேள்வியே என்னவென்று தெரியாதே..!!
அதேபோல், எந்த துறை பற்றியும் தெரியாமல், நிர்வாகம் பற்றி கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல், ரீல்ஸ் காண்பித்து முதல்வராகி விட்டால் மட்டும் எல்லாம் தானாக நடந்துவிடுமா தமிழ்நாடு முதல்வர் அவர்களே?
தமிழகத்தின் அக்டோபர் மாத #GST வருவாய் வளர்ச்சி வெறும் 3%-ஆக, தேசிய சராசரியை விட மிகக் குறைவாக இருப்பதாக வரும் செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது. ஒருபுறம், தமிழகத்தின் விலைவாசி உயர்வு தேசிய சராசரியை விட அதிகமாகி, மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம், நமக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு சென்றுக் கொண்டிருக்கின்றன. இன்று கூட, 3 தென்கொரிய நிறுவனங்கள் தங்கள் 1614 கோடி ரூபாய் முதலீட்டை தமிழ்நாட்டை நிராகரித்துவிட்டு ஆந்திர மாநிலத்திற்கு சென்றுவிட்டதாக செய்திகள் வருகின்றன. திருமலை படத்தில், @actorvijay “Take Diversion “ என்று நடிகர் விவேக்கை திருப்பதியில் இறக்கி விடுவதைப் போல, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில்களை எல்லாம் “Take Diversion” என்று ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது இன்றைய தவெக அரசு. தொழில் வளம் பெருகி, பல வேலைவாய்ப்புகள் வந்து, அதனால் GDP முன்னேறி, Per Capita Income உயர்ந்தால் தானே, GST வருவாய் அதிகரிக்கும்? தொழில் வளம் எல்லாம் மற்ற மாநிலங்களிடம் தாரை வார்த்துவிட்டு, மக்களுக்கு “Purchasing Power” இல்லாமல் போனால் எப்படி GST வருவாய் உயரும்? இதையெல்லாம் சொல்லிப் புரிய வைக்கும் ஆட்சியா இன்றைக்கு இருக்கிறது? இந்த லட்சணத்தை சுட்டிக் காட்டினால் இன்றைய ஆட்சியாளர்களுக்கு கோபம் வேறு வருகிறது. தமிழ்நாட்டின் எதிர்கால தொழில்வளத்தைக் கட்டமைக்க மாண்புமிகு அம்மா அவர்கள் துவக்கிய @Guidance_TN அமைப்பை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி இருக்கிறது இன்றைய ஆச்சரியக்குறி அரசு. குரங்கின் கையில் கிடைத்த பூமாலை போல இந்த கூட்டத்திடம் தமிழகத்தில் நிர்வாகம் மாட்டிக் கொண்டு படும் பாடு, வரலாற்றுச் சோகம்! தேர்வுக்கு ஒரு வார்த்தை கூட படிக்காமல், இவ்வளவு ஏன், என்ன Subject என்றே தெரியாமல், தேர்வு நாள் அன்று Question Paper-ஐ பார்த்தால் பதில் வந்துவிடுமா? உங்களுக்கு தான் கேள்வியே என்னவென்று தெரியாதே..!! அதேபோல், எந்த துறை பற்றியும் தெரியாமல், நிர்வாகம் பற்றி கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல், ரீல்ஸ் காண்பித்து முதல்வராகி விட்டால் மட்டும் எல்லாம் தானாக நடந்துவிடுமா @CMOTamilNadu அவர்களே? தமிழ்நாட்டிற்கென்று ஒரு வளர்ச்சிப் பாதையை கஷ்டப்பட்டு கட்டமைத்து, அந்த வளமான பாதையில் பயணிக்கச் செய்திருக்கிறோம். அதை பாழாக்கி விடாதீர்கள்! @AIADMKOfficial
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) November 2, 2026
தமிழ்நாட்டிற்கென்று ஒரு வளர்ச்சிப் பாதையை கஷ்டப்பட்டு கட்டமைத்து, அந்த வளமான பாதையில் பயணிக்கச் செய்திருக்கிறோம். அதை பாழாக்கி விடாதீர்கள்" என தெரிவித்துள்ளார்.