தூரசக்தி கட்சியை காப்பாற்ற முயல்கிறதா பேரசக்தி? தவெகவை விமர்சித்த இபிஎஸ்

Edappadi K. Palaniswami Central Bureau of Investigation Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Jun 04, 2026 02:44 PM GMT
Report

 மின்வாரிய ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மின்வாரிய ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய (TNEB) தலைமையக அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூரசக்தி கட்சியை காப்பாற்ற முயல்கிறதா பேரசக்தி? தவெகவை விமர்சித்த இபிஎஸ் | Eps Slams Tvk Govt In Tneb Hard Disk Theft

இது தொடர்பாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், மின்வாரிய ஒப்பந்த ஊழியர் கோபிநாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான கோபிநாத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

CBI விசாரணை

இந்த ஹார்ட் டிஸ்க் திருட்டு குறித்து CBI விசாரணை நடத்த வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 Hard Disk-கள் காணவில்லை என செய்திகள் வருகின்றன. 

தூரசக்தி கட்சியை காப்பாற்ற முயல்கிறதா பேரசக்தி? தவெகவை விமர்சித்த இபிஎஸ் | Eps Slams Tvk Govt In Tneb Hard Disk Theft

தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?

நடு இரவில் திருடர்கள் வந்து திருட, இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம்.

தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி? 

Hard Disk திருட்டு குறித்து முறையான CBI விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிவர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.